ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 26 அக்டோபர் 2022 (18:16 IST)

பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை: அதிரடி அறிவிப்பு

schools
தமிழகத்தில் உள்ள ஒரு சில மாவட்டங்களுக்கு மட்டும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மருதுபாண்டியர் குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை தேவகோட்டை இளையாங்குடி மானாமதுரை காளையார்கோவில் திருப்புவனம் தாலுகாவில் உள்ள கல்லூரிகளுக்கு மட்டும் நாளை அதாவது அக்டோபர் 27ஆம் தேதி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மருதுபாண்டியர் குருபூஜை அந்த பகுதியில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். எனவே பள்ளி கல்லூரிகளுக்கு நாலை விடுமுறை விடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் அக்டோபர் 30-ஆம் தேதி தேவர் குரு பூஜை நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran