திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 4 ஜூலை 2019 (14:14 IST)

கஜா புயலில் பாதித்த மக்களுக்கு அடுக்குமாடி வீடுகள்: ஓ.பி.எஸ்.அறிவிப்பு

கஜா புயலில் பாதித்த வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு, அடுக்குமாடி குடியிருப்புகள் கட்ட திட்டமிட உள்ளதாக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தை தாக்கிய கஜா புயலால் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. புயலில் வீசிய சூறைக்காற்றால் குடியிருப்புகளின் மீது மரங்கள் விழுந்ததால் குடியுருப்பில் தங்கியிருந்த மக்கள் வீடுகளை இழந்தனர்.

மேலும் கஜா புயலால் பல உயிரிழப்புகளும் நிகழ்ந்தன. இந்நிலையில் இன்று சட்டசபையில் கஜா புயலால் பாதித்த மக்களுக்கு வீடுகள் கட்டித் தரவேண்டும் என்று திமுக-வைச் சேர்ந்த மதிவாணன் கூறினார்.

இதனைத் தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயலால் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவரூர் ஆகிய மாவட்டங்களில் பெரும் சேதம் ஏற்பட்டது எனவும், அந்த பகுதிகளில் பாதித்த வீடுகளை கணக்கெடுக்கப்பட்டு, அவர்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் கூறினார்.

மேலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலமாக மொத்தம் 28,671 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் தனிவீடுகள் ரூ.1742.22 கோடி செலவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனிடையே நாகை மாவட்டத்தில் 7,458,தனிவீடுகளும், 5,308 அடுக்குமாடி வீடுகளும், ரூ.776.04 கோடி மதிப்பிட்டில் கட்ட தமிழ்நாடு குடிசை மற்று வாரியத்தால் திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.