வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஜூலை 2019 (10:37 IST)

அதிகாரத்தை வைத்து ஆட்டத்தை கலைப்பாரா ஓபிஎஸ்? மகனின் வெற்றிக்கு எதிராக வழக்கு!

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தின் வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் வாக்காளர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் தேனி தொகுதியில் போட்டியிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் இவர்தான். 
 
இந்நிலையில் இவரது வெற்றி செல்லாது என ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றிக்கு எதிராக தேனியை சேர்ந்த வாக்காளர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு குறித்து அந்த வாக்காளரின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 
 
நடந்து முடிந்த மக்களவை தேர்தல் தேனி தொகுதியில் அதிமுக சார்பில் ரவீந்திரநாத் குமார் போட்டியிட்டார். இவர் தொகுதியில் வாக்காளர்களுக்கு அதிக பணப்பட்டுவாடா செய்தார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. 
இதேபோன்ற புகார் வேலூர் தொகுதிக்கு வந்தபோது தேர்தல் ஆணையம் தேர்தலை ரத்து செய்தது. ஆனால், தேனி தொகுதியில் அதிக அளவில் புகார் வந்தபோதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காதது ஏன்?  
 
அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத் குமார் முறைகேடு செய்து வெற்றி பெற்றுள்ளார். எனவே இவரின் வெற்றி செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில், ஓபிஎஸ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி இந்த வழக்கை ஒன்றுமில்லாமல் செய்துவிடுவார் என தேனி நெருங்கிய வட்டார செய்திகள் தெரிவிக்கின்றன.