தொடர்புடைய செய்திகள்
- திருவண்ணாமலை தீபத் திருவிழா: தாம்பரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கம்!
- பிரபஞ்சம் தோன்றியதில் இருந்து இருக்கும் மலை திருவண்ணாமலை..!
- திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை: தமிழக அரசு
- திருவண்ணாமலையில் மகாதீபம் நிச்சயம் ஒளி வீசும்! - அமைச்சர் சேகர்பாபு உறுதி!
- திருவண்ணாமலை கார்த்திகை மகா தீபம்! பக்தர்கள் எதையெல்லாம் செய்யக் கூடாது! - காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகள்!
இன்று மாலை திருவண்ணாமலையில் மகா தீபம்! கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்..!
இன்று மாலை திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவதை அடுத்து, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து உள்ளதாகவும், இதனை அடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கடந்த நான்காம் தேதி கொடி ஏற்றத்துடன் கார்த்திகை தீப திருவிழா தொடங்கிய நிலையில், இன்று பத்தாவது நாள் விழாவான பரணி தீபம் மற்றும் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
இன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இன்று மாலை 6:00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. இந்த தீபத்தை தரிசனம் செய்ய சுமார் 40 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், மேலும் 14,000 அதிகமான போலீசார் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மகா தீபத்தை ஒட்டி இன்று அருணாச்சலேஸ்வரர் கோயிலில் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதனை பல பக்தர்கள் பார்த்து பரவசம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
