1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 4 ஏப்ரல் 2021 (08:49 IST)

தங்கக்காசுகளை பட்டுவாடா செய்த பாஜகவினர்: பறக்கும் படையினர் வந்தவுடன் ஓட்டம்!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இன்று இரவு ஏழு மணி உடன் பிரச்சாரம் ஓய்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் நாளையும் பொதுமக்களுக்கு பணம் வினியோகிக்கும் செயலில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபடுவார்கள் என்பதால் பறக்கும் படையினர் மிகுந்த கவனத்துடன் சோதனை போட்டு வருகின்றனர்
 
இந்த நிலையில் திருநள்ளாறு தொகுதியில் பாஜகவினர் சிலர் பொதுமக்களுக்கு தங்க காசு மற்றும் பணம் பட்டுவாடா செய்து வந்ததாக தகவல்கள் வெளிவந்தன. இதனை அடுத்து பறக்கும் படை அதிகாரிகள் அந்த பகுதிக்கு உடனடியாக சென்றனர் என்பதும் அவர்களை பார்த்தவுடன் தங்க காசுகளை பட்டுவாடா செய்து கொண்டிருந்த பாஜகவினர் கையிலிருந்த தங்க காசுகளை கீழே போட்டு விட்டு தப்பி ஓடி விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
திருநள்ளாறு தொகுதியில் பாஜகவினர் தங்கக்காசுகளை வினியோகம் செய்ததை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500, 1000 என பணம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகள் தற்போது தங்ககாசு லெவலுக்கு இறங்கி விட்டதைப் பார்க்கும் போது தேர்தல் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்