வியாழன், 3 அக்டோபர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : சனி, 14 செப்டம்பர் 2024 (16:49 IST)

வீட்டில் பிறந்த கன்று குட்டி.! தூக்கி கொஞ்சிய பிரதமர் மோடி.!

Modi
பிரதமரின் இல்லத்தில் புதிதாக பிறந்த கன்று குட்டியை பிரதமர் மோடி தூக்கி கொஞ்சி விளையாடும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 
பிரதமர் மோடி டெல்லியில் உள்ள பிரதமருக்கான இல்லத்தில் வசித்து வருகிறார். பிரதமர் இல்லத்தில் பசு உள்ளிட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் இல்லத்தில் வளர்க்கப்பட்டு வரும் பசு மாடு ஒன்று இன்று கன்றுக்குட்டி ஒன்றை ஈன்றுள்ளது.

இந்த கன்றுக்குட்டி பிறந்ததை பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோவுடன் பதிவிட்டுள்ளார்.  அந்த கன்றுகுட்டியை தூக்கி பிரதமர் இல்லத்தில் உலா வரும் மோடி, அந்த கன்று குட்டியை வீட்டின் உள்ளே அழைத்துச் செல்வதும் வீட்டின் உள்ளே இருந்த பூஜையறையில் துர்காதேவி சிலைக்கு முன்பு புதியதாக பிறந்த கன்றுக்குட்டிக்கு மாலையிட்டார். 

 
பின்னர், அந்த கன்றுக்குட்டியை தூக்கி கொஞ்சி விளையாடினார்.  அந்த கன்றுகுட்டிக்கு “தீபஜோதி” என்று பெயரிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.