திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 மே 2022 (18:38 IST)

கீர்த்தி சரேஷின் செல்பி புகைப்படம் வைரல்...

keerthy suresh
தமிழ் சினிமாவில் முன்னணி   நடிகை  கீர்த்தி சுரேஷின் செல்ஃபி புகைப்படம் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் விஜய், விஷால், தனுஷ் ஆகிய முன்னணி  நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவுகு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள படம் சர்க்காரு வாரி பாட்டா. இப்படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. செல்வராகவனுக்கு தங்கையான கீர்த்தி சுரேஷ் நடித்த சாணிக் காயிதம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது. அதில் கீர்த்தி சுரேஷ் நடிப்பு பாராட்டப்பட்டது.

இ ந்  நிலையில் ராம் சரணின் 15 வது படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

ஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதி  வரும் ஒரு புதிய படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்கின்றனர். கியாரா  அத்வானி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் கேரளாவில்  நடைபெற்ற தன் தோழியின் திருமணத்தி கலந்துகொண்டார். அப்போது அவர் தன் தோழிகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.