வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 10 மே 2022 (18:29 IST)

விண்ணைத் தாண்டி வருவாயா-2 படம் எப்போது? இயக்குநர் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் கெளதம் மேனன். இவர் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இப்படத்தில் சிம்பு- திரிஷா- சமந்தா  நடித்திருந்தனர். இப்படத்திற்கு ரஹ்மான் இசையமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் ஹிட் ஆனது.

மீண்டும் சிம்பு நடிப்பில் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை அவர் இயக்கியிருந்தார். தற்போது 3 வது முறையாக சிம்பு நடிப்பில் வெந்து தணிந்தது காடு என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கெளதம் மேனனிடன் விண்ணை தாண்டி வருவாயா படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், இப்படத்தின் 2 வது பாகத்திற்கு ஸ்கிரிட்ப் வேலை நடந்து வருவதாகவும்,இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும், கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் அதற்கான முன்னோட்டம் எனத் தெரிவித்துள்ளார்.