வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வியாழன், 17 நவம்பர் 2022 (22:20 IST)

தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது- துரைமுருகன்

தமிழ்நாட்டில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருவதாக அமைச்சரும், திமுக பொதுச்செயலாளரருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ் நாட்டில்  10 ஆண்டுகளுக்குப் பின் அதிமுகவை வீழ்த்தி ஸ்டாலின் தலைமையிலான திமுக  வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான அதிமுகவில் எடப்பாடி அணி, பன்னீர்செல்வம் அணி, சசிகலா அணி என மூன்றணியாக உள்ளதால், உட்கட்சி பிரச்சனைகளே அவர்களுக்குப் பெரிதாக உள்ளதுபோல் தோற்றம் உருவாகியுள்ளளாது.

இந்த நிலையில், வேலூர் மாவட்டத்தில் உள்ள லத்தேரியில்  திமுக பொது உறுப்பினர் கூட்டம்  நடந்தது, இதில், கலந்துகொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முந்தைய அதிமுக ஆட்சியில் ரூ.7 லட்சம் கோடியை கடனில் விட்டுச் என்ருள்ளனர். அதனால், நிதித்துறையில் பணியாற்றுவோர் தடுமாறி வருகின்றனர். இதுவரை அதிமுகதான் எதிர்க்கட்சியாக இருந்தது,. ஆனால், பாஜக பிசாசு மாதிரி உருவெடுத்துள்ளதால், நமக்கு எதிராக சம பலத்துடன் போராடுவார்கள்…அதனா, அவர்களையும் சேர்த்தே எதிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

தங்களை முக்கிய எதிர்க்கட்சி என திமுக மூத்த தலைவர் கூறியது பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited By Sinoj