வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (20:46 IST)

சினிமாவில் மோடி இருந்திருந்தால் ரஜினியை மிஞ்சியிருப்பார்: திருமாவளவன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது போயஸ் கார்டன் வீட்டின் முன் செய்தியாளர்களை சந்தித்தபோது பாஜகவின் வெற்றி மோடி என்ற தனி மனிதருக்கு கிடைத்த வெற்றி என்றும், தமிழகத்தில் மோடிக்கு எதிரான அலை இருந்ததால் அவரால் வெற்றி பெற முடியவில்லை என்றும் கூறினார். மேலும் நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய் போன்ற தலைவர்களை போல் மக்களை கவரும் தலைவர் மோடி என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.
 
இந்த நிலையில் மோடி குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த விசிக தலைவர் திருமாவளவ்ன், 'பிரதமர் மோடியின் மீது நடிகர் ரஜினிகாந்த் ஈர்ப்புக்கு உள்ளாகி உள்ளார் என தெரிகிறது என்றும், பிரதமர் மோடியை சூப்பர் ஸ்டாருக்கு எல்லாம் சூப்பர் ஸ்டாராக ரஜினி அங்கீகரிப்பது போல் தெரிகிறது என்றும் கூறினார். மேலும் சினிமாவில் மோடி இருந்தால் ரஜினியை மிஞ்சக்கூடிய நடிகராக இருப்பார் என்றும் திருமாவளவன் தெரிவித்தார். 
 
மேலும், செய்தியாளரிடம் சாதி பெயரை கிருஷ்ணசாமி கேட்டது வருத்தமும், வேதனையும் அளிக்கிறது என்றும், நான் உட்பட கட்சி தலைவர்கள் சாதி பெயரை குறிப்பிட்டு பேசுவது தவறானது என்றும், சாதிய, மதவாத சக்திகளை தமிழக மக்கள் தோல்வி அடைய வைத்துள்ளனர் என்றும் மற்றொரு கேள்விக்கு திருமாவளவன் பதிலளித்தார்.