புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (16:46 IST)

ட்ரெண்ட் ஆகும் மோடி குல்பி – குஜராத் ஐஸ் வியாபாரியின் சாதனை

மக்களவை தேர்தலில் நரேந்திர மோடி வெற்றியடைந்து மீண்டும் பிரதமர் ஆவதை கொண்டாடும் வகையில் குஜராத் ஐஸ் வியாபாரி ஒருவர் அறிமுகப்படுத்திய மோடி குல்ஃபி தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.

குஜராத் மாநிலம் சூரத் பகுதியை சேர்ந்தவர் ஐஸ் வியாபாரி விவேக் அஜ்மேரா. நரேந்திர மோடி மறுபடி பிரதமர் ஆவதை கொண்டாடுவதற்காக இவர் “மோடி சீதாப்பழ குல்ஃபி” என்ற புதிய வகையை அறிமுகப்படுத்தினார். இதன் சிறப்பு என்னவென்றால் மோடியின் முகத்தையே குல்பி ஐஸாக தயாரித்திருக்கிறார்கள்.

மோடி பதவியேற்கும் மே 30ம் தேதி வரை இந்த ஸ்பெஷல் குல்ஃபி 50சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும் எனவும் அஜ்மேரா தெரிவித்துள்ளார். சூரத் பகுதியினர் மோடி குல்பியோடு செல்பி எடுத்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.