வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (19:06 IST)

ஒரு கோடி இழப்பீடு, அரசு வேலை: சுஜித் குடும்பத்திற்கு வழங்க திருமாவளவன் கோரிக்கை!

கடந்த 4 நாட்களாக உயிருக்கு போராடி வந்த சுஜித் என்ற 2 வயது சிறுவன் இன்று அதிகாலை பிணமாக மீட்கப்பட்ட நிலையில் சுஜித்தின் குடும்பத்தினர்களுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருவதோடு நிதியுதவியும் செய்து வருகின்றனர்.
 
சுஜித் குடும்பத்திற்கு திமுக தரப்பில் இருந்து ரூபாய் 10 லட்சமும், அதிமுக தரப்பிலிருந்து ரூபாய் 10 லட்சமும், தமிழக அரசு தரப்பிலிருந்து ரூபாய் 10 லட்சமும் வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 30 லட்சம் சுஜித்தின் மறைவிற்கு ஈடான இழப்பீடு இல்லை என்றாலும் ஒரு ஆதரவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சுஜித் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்த விடுதலை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் சுஜித்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதோடு அவரது பெற்றோருக்கு ரூபாய் ஒரு கோடி நிதியுதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் 
 
மேலும் ஆழ்துளை கிணற்றில் பல மணி நேரம் உயிருக்கு போராடிய சிறுவனை காப்பாற்ற நம்மிடையே உரிய மீட்பு தொழில்நுட்பம் இல்லாதது தேசிய அவமானம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் ஆழ்துளை கிணற்றில் கடந்த 5 நாட்களாக தீவிர மீட்பு பணியில் ஈடுபட்ட தமிழக அரசு உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது