ராம்குமார் தற்கொலை பற்றி திருமாவளவன் எழுப்பும் கேள்வி!


Dinesh| Last Updated: திங்கள், 19 செப்டம்பர் 2016 (07:48 IST)
சுவாதி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் மின்கம்பியை கடித்து தற்கொலை செய்துக்கொண்டதாக சிறை காவலர்கள் தெரிவித்தனர்.

 
 
இந்நிலையில், தொடக்கத்தில் இருந்தே ராம்குமார் கைது பற்றியும் சுவாதி கொலை பற்றியும் பல்வேறு சந்தேகத்தை எழுப்பி வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ராம்குமார் தற்கொலை குறித்து கூறியதாவது, 
 
“ராம்குமார் தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. ராம்குமார் மின்கம்பியை கடித்துக் கொண்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார் என்று தகவல் வெளியான சற்று நேரத்திற்கெல்லாம் ராம்குமார் உயிரிழந்தார் என்று சொல்லப்படுகிறது. இதனால், இந்த தற்கொலையில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, ராம்குமார் தற்கொலை குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும். வெளியில் இருந்தாலும் தலித்துகளுக்கு பாதுகாப்பு இல்லை, சிறையில் இருந்தாலும் தலித்துகளுக்கு பாதுகாப்பில்லை. ராம்குமாரின் தற்கொலைக்கு அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :