1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Puducherry Govt announce about schools opening

பள்ளிகள் திறப்பு… ஆனா மதிய உணவு கிடையாது! – புதுச்சேரி அரசு அறிவிப்பு!

Tamilnadu
புதுச்சேரியில் 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மெல்ல பள்ளிகள் திறக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் நவம்பர் 1 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 8 முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும். காலை 9.30 முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என்றும், பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
வெற்றி வேட்பாளர்களுடன் புகைப்படம்; ஒரமாக ஒதுங்கிய விஜய்! – வைரலாகும் புகைப்படம்!