Daily Horoscope
✕

சீமானுக்கு கீழே இறக்குறவங்களுக்கு அறிவே இல்ல!.. திருமாவளவன் கோபம்!..

Updated: திங்கள், 12 அக்டோபர் 2026 (10:42 IST)
15 வருடங்களுக்கு முன்பு தமிழகத்தில் நாம் தமிழர் என்கிற அரசியல் கட்சியை தொடங்கியவர் சீமான். சினிமா துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர் இவர். திமுக, அதிமுக போன்ற திராவிட கட்சிகளுக்கு எதிராக தமிழ் தேசியத்தை முன் வைத்தார். எனவே திராவிட கட்சிகளுக்கு மாற்றை விரும்பியவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்தனர்.

இதனால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு எண்ணிக்கை 8 சதவீதம் வரை உயர்ந்தது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தலில் அந்த கட்சியின் வாங்கி கடுமையாக சரிந்தது.. நடந்து முடிந்த இடைத்தேர்தலிலும் அந்த கட்சி டெபாசிட் இழந்தது.

இந்நிலையில்தான், திண்டிவனத்தில் நடந்த தமிழ் தேசிய எழுச்சி கூட்டத்தில் பேசிய திருமாவளவன் ‘விசிகவும் தமிழ் தேசியம் பேசுகிறது.. இது திரிபுவாத கும்பலுக்கு பிடிக்கவில்லை.. நாம் தமிழர் கட்சியிலே ஒரு நபர் இருக்கிறார்.. நண்பர் சீமான் அப்படி இல்லை.. அவர் எப்போதும் நாகரீகமாகத்தான் பேசுகிறார்.. ஆனால் அவருக்கு கீழ் உள்ளவர்கள் ஒருவர் கூட ஞானமுள்ளவர்கள் இல்லை. ஜாதியவாதிகளும், மதவெறிகளும்தான் இருக்கிறார்கள்.. அரசியல் முதிர்ச்சியும், பக்குவமும் உள்ளவர்கள் கிடையாது. சீமானுக்கு கெட்ட பெயரை அந்த கும்பல்தான்’ என பேசினார்.

நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு அடுத்தபடியாக பிரபலமானவர் சாட்டை துரைமுருகன். தவெக அரசு மற்றும் முதல்வர் விஜயை   மிகவும் தரக்குறைவாக விமர்சித்து தொடர்ந்து வீடியோவை வெளியிட்டு வருபவர். அவரைத்தான் திருமாவளவன் மறைமுகமாக சொல்கிறார் என பலரும் கருதுகிறார்கள்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

தாராபுரம், மதுராந்தகம் எம்.எல்.ஏக்கள் பதவியேற்பு.. தவெக பலம் 109...

ரேசன் கடைகளில் வெங்காயம் விற்பனை.. ஒரு கிலோ ரூ.35 மட்டுமே..

சவுதி அரேபியாவின் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல்.. ஹூதி அமைப்புக்கு எதிராக அமெரிக்கா ராணுவ நடவடிக்கை?

உச்சநீதிமன்ற நீதிபதியை சந்திக்க ஊர்வலமாக செல்ல திட்டம்.. இந்தியா கூட்டணி தலைவர்களின் அடுத்த மூவ்..

விமான நிலையம் - கிளாம்பாக்கம் உள்பட 3 மெட்ரோ வேண்டும்: பிரதமரிடம் முதல்வர் விஜய் கோரிக்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments