கல்யாணம் ஆன உடனே குழந்தை எங்கே என்று கேட்பதா? ரெய்டு குறித்து எச்.ராஜா
சசிகலா மற்றும் தினகரன் உறவினர்களின் வீட்டில் ரவுண்டு கட்டி இரண்டாவது நாளாக இன்றும் தொடர்ந்து ரெய்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் அரசியல் விமர்சகர் ஒருவர் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம், 'ரெய்டு குறித்த ரிசல்ட் என்ன? என்றும் ரிசல்ட்டை அறிய ஆவலுடன் காத்திருப்பதாகவும் கூறினார்.
இதற்கு பதில் அளித்த எச்.ராஜா, இப்போதுதான் கல்யாணம் ஆகியுள்ளது. அதற்குள் குழந்தை எங்கே என்று கேட்கலாமா? என்று பதிலளித்தார்.
ஆனால் கடந்த ஒருவருடமாக நடந்த ரெய்டுகளின் ரிசல்ட்டே இன்னும் தெரியவில்லை, கல்யாணம் ஆகி ஒருவருஷன் ஆகியும் ஏன் குழந்தை இல்லை என்று கேட்கலாம் தானே! என்று அந்த விமர்சகர் மீண்டும் ஒரு அதிரடியாக ஒரு கேள்வி கேட்க, அதற்கு எச்.ராஜா இன்னும் பதில் கூறாமல் உள்ளார்.
மேலும் எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு 'தலைமை செயலகத்துல நடந்த ரெய்டு குழந்தை பள்ளிக்கு சென்றுவிட்டதா? என்றும், சேகர் ரெட்டி பிள்ளைக்கு பிறந்தநாளே முடிந்தது இன்னும் பெயர் சூட்டவில்லை ஏன்? என்றும் தமிழ்நாட்டில் எவ்வளவு கல்யாணம் பன்னுனலும் ஒரு குழந்தை கூட பெத்துக்க முடியாது என்றும் அதிரடியாக கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.