திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம்!.. கொந்தளித்த திருமாவளவன்!...
கடந்த பல தேர்தலாகவே திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தை கட்சி திமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது. திருமாவளவன் தற்போது எம்பி- ஆகவும் இருக்கிறார்.
அதேநேரம் ராமதாஸின் பாமக கட்சிக்கும் விடுதலை சிறுத்தைக்கும் எப்போதும் ஆகாது.. இரு கட்சியை சேர்ந்தவர்களும் அடிக்கடி மோதிக் கொள்வார்கள்.. சாதி ரீதியிலாகவே இருவருக்கும் இடையே பல பிரச்சனைகள் உண்டு..
எனவே பாமக இடம்பெறும் கூட்டணியில் விடுதலை சிறுத்தை இடம் பெறாத என திருமாவளவன் தொடர்ந்து சொல்லி வருகிறார். ஒருபக்கம் அன்புமணி அதிமுக கூட்டணிக்கு சென்று விட்ட நிலையில் ராமதாசை திமுகவுக்கு கொண்டு வரும் முயற்சி நடைபெற்று வருவதாக தெரிகிறது..
இந்நிலையில், இதுபற்றி ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்த திருமாவளவன் பாஜக மதத்தின் அடிப்படையிலான வெறுப்பு அரசியலை சிறுபான்மையினருக்கு எதிராக பரப்புகிறார்கள்.. பாமக சாதி அடிப்படையிலான வெறுப்பு அரசியலை பட்டியல் சமூக மக்களுக்கு எதிராக பரப்புகிறார்கள்.. சோசியல் இன்ஜினியரிங் என்கிற பெயரில் சமூகங்களுக்கு இடையில் வெறுப்பை விதைத்து பிரிவினை உண்டாக்கும் இந்த இரு கட்சிகளுடனும் எப்போதும் தேர்தல் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம்..
இந்த முடிவை எடுக்கும் சுதந்திரமும் அதிகாரமும் எங்களுக்கு இருக்கிறது. அதேநேரம் திமுகவிற்கு அழுத்தம் கொடுக்க நாங்கள் விரும்பவில்லை. திமுகவின் முடிவு எங்களின் நிலைப்பாட்டிற்கு எதிராக இருந்தால் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறுவதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை என தெரிவித்திருக்கிறார்..