செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 12 நவம்பர் 2019 (13:18 IST)

துணை முதல்வருக்கு மூன்றாவது விருது..

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு அமெரிக்காவில் “மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அரசு முறை பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ள நிலையில், சிகாகோ தமிழ் மன்றம் சார்பாக “தங்க தமிழ் மகன்” என்ற விருது வழங்கப்பட்டது.

அதன் பின்பு அங்கு நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட அவருக்கு, ”ஆசியாவின் வளரும் நட்சத்திரம்” என்ற விருது வழங்கப்பட்டது. இது போல் தொடர்ந்து இரண்டு விருதுகள் வாங்கியுள்ள நிலையில் தற்போது அமெரிக்காவின் நெபர்வல்லியில் “மகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் துணை முதல்வர் ஓ.பன்னீர் செலவத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.