திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 12 நவம்பர் 2019 (11:14 IST)

பரோலில் வெளிவந்தார் பேரறிவாளன்!!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் ஒரு மாத பரோலில் வெளிவந்துள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 28 ஆண்டுகள் வேலூர் சிறையில் இருக்கும் பேரறிவாளனை விடுதலை செய்ய அவரது தாயார் அற்புதம்மாள் பல வருடங்களாக போராடி வருகிறார். பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலை குறித்து பல அமைப்புகளும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பேரறிவாளன் தந்தையின் உடல்நலம் கருதி அவருக்கு ஒரு மாத பரோல் வழங்கப்பட்டுள்ள நிலையில் இன்று சிறையிலிருந்து வெளியே வந்தார். எனினும் அவருக்கு சிறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடந்த ஆண்டு பேரறிவாளன் ஒரு மாத காலம் பரோலில் வெளிவந்துள்ளார், என்பது கூடுதல் தகவல்.