வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2023 (18:41 IST)

சென்னை ஐஐடியில் மாணவர்கள் தற்கொலை : டிஜிபி திலகவதி IPS தலைமையில் விசாரணை குழு

சென்னை ஐஐடியில் கடந்த சில மாதங்களாக மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டு வருவது தொடர்கதை ஆகி வரும் நிலையில் இது குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற ஜிடிபி திலகவதி ஐபிஎஸ் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.

சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த மூன்று மாதங்களில் நான்கு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்பதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் மாணவர்களின் தற்கொலையை தடுப்பதற்காக ஐஐடி நிர்வாகம் கவுன்சிலிங் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை ஐஐடியில் தொடர்ச்சியாக மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தொடர்பாக விசாரணை செய்ய ஓய்வு பெற்ற டிஜிபி திலகவதி ஐபிஎஸ் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.

 திலகவதி ஐபிஎஸ், சபிதா ஐஏஎஸ், கண்ணகி பாக்கியநாதன் ஐஏஎஸ், பேராசிரியர் ரவீந்திர கெட்டு மற்றும் அமல் மனோகரன் ஆகியோர்கள் கொண்ட குழு மாணவர்கள் தற்கொலை குறித்து விசாரணை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by Mahendran