வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 22 மே 2023 (21:08 IST)

எல்.இ.டி டிவியை திருடிச் செல்லும்போது... சிரித்ததால் சிக்கிய திருடர்கள்

thief
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே எல்.இ.டி டிவியை திருடிச் சென்றபோது, சாதுர்யமாகச் செயல்பட்ட போலீஸார் திருடர்களை கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் கற்குழி பகுதியில் , உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சதாம் என்ற நபர் மின்சாதனங்களை வாடிக்கையாளர்களின் இல்லங்களுக்கே எடுத்துச் சென்று விற்பனை செய்து வருகிறார்.

இன்று தன் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு செல்ல வேண்டி, எல்.இ.டி டிவி ஒன்றை தன் நண்பரின் உதவியுடன் எடுத்துச் செல்லும்போது, இருசக்கரவாகனத்தில் வந்த இருவர் அவர்களை வழிமறித்து, மிரட்டி, அந்த டிவியை பறித்துச் சென்றனர்.

இதுகுறித்து, சதாம் போலீஸில் புகாரளித்தார். சிசிடி காட்சிகளை சோதனை செய்த போலீஸார்,  ஏரியில் இருந்த திருடர்களைக் கண்டுபிடித்தனர். ஏரியில் இருந்து அவர்கள் தப்பிச் செல்லும்போது, சாதுர்யமாகச் செயல்பட்டு வழிப்பறி செய்தவர்களை கைது செய்து, டிவியை பறிமுதல் செய்தனர்.