வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (20:52 IST)

மழை பெய்யும் ! அனல் காற்று இன்னும் இரண்டு நாட்களுக்கு தான் - வானிலை ஆய்வு மையம்

கடந்த மே 29 ஆம் தேதியுடன் கத்தரி வெய்யிலின் தாக்கம் முடிந்தது. என்றாலும் கூட தற்போது தென்மேற்கு மழை பெய்ய வேண்டிய சமயத்தில் பரவலாக வெயிலுடன் அனல் காற்றும் வீசிவருகிறது..
இந்நிலையில் சில நாட்களாக திருசென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனல் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
 
அதனால் மக்கள் பகல் 11 மணிமுதல் மாலை 4 மணி வரை வெயிலில் செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தியிருந்தது.
 
இந்நிலையில் தற்போது வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:
 
வங்க்கடலில் அடுத்த 3-4 நாட்களுக்கு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் வெயிலில் தாக்கம் ஓரளவுக்கு குறையும் என்றும் ,வரும் 21 ஆம் தேதிக்கு மேல் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பருவமழை  பெய்யும் என்று தெரிவித்துள்ளது.