புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (16:14 IST)

’குண்டாவை யார் கழுவுவது’ ? இதற்க்காக விமானம் நிறுத்திய கொடுமை !

சாப்பிட்ட உணவுக் குண்டாவை ( டிபன் பாக்ஸ் பாத்திரம் ) யார் கழுவுவது என்ற பிரச்சனை காரணமாக ஏர் இந்தியா விமானம் 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பெங்களூரில் உள்ள ஏர் இந்தியா விமானத்தின் கேப்டன் ஒருவர், பெங்களூரில் இருந்து கொல்கத்தா செல்லும் விமானத்தை இயக்குவதாக இருந்தது. இதற்கு முன்னதாக தான் கொண்டு வந்த உணவை சாப்பிட்டு விட்டி அந்த டிஃபன் பாக்ஸை கழுவுமாறு அங்குள்ளா பணிக்குழுவைச் சேர்ந்தவரிடன் கேப்டன் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாகத் தெரிகிறது.
 
இதனால் இவ்விருவருக்கும் இடையா வாக்குவாதம் முற்றியுள்ளது. இதைப் பார்த்த பயணிகள் விமானத்திலிருந்து கீழே இறங்கிவிட்டனர்.
 
இவர்கள் இருவரின் தனிப்பட்ட காரணத்துக்காக விமானம், சில 77 நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
இந்நிலையில் தற்போது இருவரும் விசாரணைக்கு ஆஜராகும் படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த விசாரணை முடியும் வரை இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.