வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (14:55 IST)

லாரி தண்ணீரை அடுத்து இலவச மழைநீர் சேமிப்பு தொட்டி: ரஜினி ரசிகர் மன்றம் அசத்தல்

சென்னையில் தண்ணீர் பிரச்சனை தலைவிரித்தாடி வரும் நிலையில் மற்ற அரசியல் கட்சிகளைப்போல் ஆளும் கட்சிகளை குறை சொல்லாமல் களத்தில் இறங்கிய ரஜினி மக்கள் மன்றம் தங்கள் சொந்த காசில் லாரி தண்ணீரை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். இதை பார்த்து காப்பியடித்த ஒருசில அரசியல் கட்சிகள் விளம்பரத்திற்காக ஒருசில லாரிகளில் தண்ணீர் வழங்கி அதனை புகைப்படம் எடுத்து விளம்பரப்படுத்தி கொண்டனர்.
 
இந்த நிலையில் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய காரணம் சரியாக மழைநீர் சேமிப்பு திட்டம் இல்லாததுதான். தமிழகத்தில் போதுமான அளவு மழை பெய்தும் அந்த மழைநீர் கால்வாய்கள் வழியாக கடலில் கலப்பதால் தான் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இந்த நிலையில் அடுத்தகட்டமாக தமிழகம் முழுவதும் வீடுகளில் இலவசமாக மழைநீர் சேமிப்பு தொட்டி கட்டித்தர ரஜினி மக்கள் மன்றம் முடிவு செய்துள்ளது
 
முதல்கட்டமாக கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு அம்மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் மழைநீர் சேமிப்பு தொட்டி வசதி இல்லாத வீடுகளுக்கு இலவசமாக அந்த தொட்டியை கட்டித்தர முடிவு செய்து தொடர் கொள்ள வேண்டிய மொபைல் எண்களையும் வெளியிட்டுள்ளது. இதேபோல் அனைத்து தொகுதிகளுக்கும் மழைநீர் சேமிப்பு தொட்டிகளை அந்தந்த மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினர் இலவசமாக கட்டிக்கொடுக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது