திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: செவ்வாய், 5 டிசம்பர் 2023 (15:19 IST)

சென்னையில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சுரங்க பாதைகள்! – போக்குவரத்து நிலவரம்!

சென்னையில் கனமழை காரணமாக நீர் தேங்கியுள்ளதால் பல சுரங்க பாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.


 
விமான நிலையத்தில் இருந்து அண்ணா சாலை வரையும், கிழக்கு கடற்கரை சாலையிலும் போக்குவரத்து சீராக உள்ளது  புழல் ஏரி நீர்திறப்பு காரணமாக மஞ்சம்பாக்கம் முதல் வடபெரும்பாக்கம் வரை சாலைகளில் செல்ல அனுமதி இல்லை

தாம்பரம் ஜி.எஸ்.சாலையில் போக்குவரத்து சீராக உள்ளது  ஓ.எம்.ஆர், பெருங்குடி, அடையாறு, கோட்டூர்புரம், சாந்தோம், மீனம்பாக்கம்,கிண்டி, மத்திய கைலாஷ், திருவான்மியூர் பகுதிகள் சீராக உள்ளது

தற்காலியமாக மூடப்பட்டுள்ள சென்னையில் உள்ள  சுரங்கப்பாதைகள்

1.கணேசபுரம் சுரங்கப்பாதை
2.கெங்குரெட்டி சுரங்கப்பாதை
3.செம்பியம் சுரங்கப்பாதை
4.வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
5.துரைசாமி சுரங்கப்பாதை
6.மேட்லி சுரங்கப்பாதை
7.ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை
8.மவுண்ட் - தில்லை நகர் சுரங்கப்பாதை
9.சைதாப்பேட்டை - அரங்கநாதன் சுரங்கப்பாதை
10.பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
11.சி.பி.சாலை சுரங்கப்பாதை
12.வியாசர்பாடி சுரங்கப்பாதை
13.திருவொற்றியூர், மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை
14.RBI சுரங்கப்பாதை
15.கோயம்பேடு புதுபாலம் சுரங்கப்பாதை
16.சேத்துப்பட்டு, ஹாரிங்டன் ரோடு சுரங்கப்பாதை
17.சூளைமேடு, லயோலா சுரங்கப்பாதை