1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (19:20 IST)

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்குவிஜய் மக்கள் இயக்கம் நிவாரண உதவி

#ThalapathyVijayMakkalIyakkham
விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்யப்பட்டுள்ளதாக விஜய் மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
 
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, மக்களுக்கு தேவையான அத்தியாவசிய தேவைகள் செய்து வருகின்றது. அரசுடன் இணைந்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், வெள்ளத்தால் பாதித்துள்ள மக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவி செய்துள்ளனர்.

இதுகுறித்து விஜய் மக்கள் இயக்கம் கூறியுள்ளதாவது:

’’விஜய் அவர்களின் சொல்லுக்கிணங்க, மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள்.!

•செங்கல்பட்டு மாவட்ட தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக,சித்தாமூர் ஒன்றிய கொளத்தூர் ஊராட்சி பகுதிகளில்  போர்வை, 200 நபர்களுக்கு ரொட்டி, பால், 5 நபர்களுக்கு ஸ்டவ் மற்றும் குடைகள் ஆகியவற்றை வழங்கினார்.!

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர், தொண்டரணி தலைவர், மாவட்ட, நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்’’என்று தெரிவித்துள்ளது.

மேலும்,  சித்தாமூர் ஒன்றிய கொளத்தூர் ஊராட்சி பகுதிகளில் #மிக்ஜாம் புயலால் கடும் மழையின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்து நிவாரண உதவிகளாக 150 குடும்பங்களுக்கு 5-கிலோ அரிசி, 15 வீடுகளுக்கு தார்பாய், 50 நபர்களுக்கு பிளாஸ்டிக் பாய், போர்வை, 200 நபர்களுக்கு ரொட்டி, பால், 5 நபர்களுக்கு ஸ்டவ் மற்றும் குடைகள் ஆகியவை வழங்கப்பட்டது.!
 
இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட தலைவர், தொண்டரணி தலைவர், மாவட்டம், நகரம், ஒன்றியம், பகுதி, கிளை மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்என்று தெரிவித்துள்ளது.