ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 5 டிசம்பர் 2023 (19:22 IST)

நடிகர் அமீர்கானின் செயல் என்னை பிரம்பிக்க வைத்தது-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

ameer khan
மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கு சாலைகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து, மக்களுக்கு தேவையான அத்தியாவச தேவைகள் செய்து வருகின்றது.

இந்த நிலையில், தான் வெள்ளத்தில் சிக்கியுள்ளாதாக நடிகர் விஷ்ணு விஷால் பதிவிட்டிருந்த நிலையில், அவர் அருகே இருந்த அமீர்கானும் மீட்கப்பட்டார்.

இதற்கு தமிழக அரசின் செயல்பாட்டை நடிகர் விஷ்ணு விஷால் பாராட்டியிருந்தார்.  இதற்கு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பாராட்டியுள்ளார். அதாவது: அரசின் செயல்பாட்டை பாராட்டியதற்கு நன்றி விஷ்ணு விஷால், சிறந்த மனிதனாகத் திகழ்வதற்கு உங்கள் அருகே இருக்கும் நபருக்கும் நன்றீ மீட்பு உதவி பெறுவதற்கு அவர் எந்த வகையிலும் தன் புகழை பயன்படுத்தாதது என்னை பிரம்பிக்க வைத்தது. தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி தேவையான விஷயத்தை சாதிக்க  நினைப்பவர்களுக்கு பாடமாக உள்ளார். புயலின் தீவிரத்தை உணர்ந்து பொறுமையாக மீட்பு உதவிகள் வரும் வரை காத்திருக்கும் நடிகர்  அமீர்கான் போன்றவர்களுக்கு நன்றி என்று தெரிவித்துள்ளார்.