திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (21:39 IST)

2015 ஆம் ஆண்டு வெள்ளத்தை விட அதிக வெள்ளம் வரும் ! சென்னை ஐஐடி எச்சரிக்கை

கடந்த 2015 ஆம்  வருடம் சென்னையில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. பல மக்கள் தங்கள் வீடு வாசல்களை இழந்தனர். இந்நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த கனமழையை விட வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் கடும் மழை பெய்யும் என சென்னை ஐஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டில் நவம்பர் 30 ஆம் தேதிமுதல்  டிசம்பர் 4 வரை கனமழை பெய்தது இதில் சென்னை வெள்ளக்காடானது.

இந்நிலையில், சென்னை ஐஐடியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில்,சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கோல்கட்டா , விசாகப்பட்டிணம் போன்ற கடலோர  நகரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அதில் கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையை விட இந்த வருடம் பெய்யும் மழையால் அதிக மழை ஏற்படும் என எச்சரித்துள்ளது.