1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 30 ஜூன் 2020 (17:34 IST)

காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க காவல் ஆணையருக்கு உத்தரவு

சென்னை அண்ணாநகரில் மாத்திரை வாங்க சென்ற நபரை கீழே தரையில் இழுத்துச் சென்ற விவகாரம் தமிழகத்தில் பெரும்  அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகைப்படம், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் இன்னும் நான்கு வாரத்தில் அறிக்கை அறிக்கை வேண்டும் என சென்னை மாநகர ஆணையருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக   மனித உரிமை ஆணையம் ,  ஊரடங்கை மீறியதாக கூறப்படும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதில் காவல் நிலையம் அழைத்து செல்வது ஏன்? அத்துமீறல்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என கேள்விகள் எழுப்பியுள்ளது.

மேலும், காவல்துறையினருக்கு அறிவுறுத்தல் வழங்க வேண்டுமென காவல் ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.