செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : புதன், 10 நவம்பர் 2021 (18:12 IST)

தடுப்பூசி செலுத்தாவிட்டால் இனிமேல் ரேசன் இல்லை

கொரொனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என  அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளுக்கு கொரோனா  தொற்றுப் பரவியது. தற்போது கொரோனா தொற்றின் 2 வது அலை வேகமாகப் பரவி வருகிறது. விரைவில் 3 வது அலை பரவவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மஹராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் கொரொனா தடுப்பூசி போடாதவர்களுக்கு ரேசன் பொருட்கள், கேஸ் சிலிண்டர் மற்றும் பெட்ரோல் கிடையாது என  அவுரங்காபாத் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் அவுரங்காபாத் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.