செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (16:06 IST)

தமிழகத்தில் மீண்டும் ஊரங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை- ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் மீண்டும் ஊரங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என தமிழக மக்கள்  நல்வாழ்வுத்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரொனா பரவல் தீவிரம் அடைந்த நிலையில் தற்போது ஓரளவு குறைந்துள்ளது. இதனால் கொரொனா ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரொனா பாதுகாப்பு வழிமுறைகள்  பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது.

இ ந் நிலையில், தமிழகத்தில் மீண்டும் ஊரங்கு பிறப்பிக்க வாய்ப்பில்லை என தமிழக மக்கள்  நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

மக்கள் அலட்சியமாக இருக்க வேண்டாம்; வழிகாட்டு நெறிமுறைகளைப்பின்பற்ற வண்டும். மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்  எனத் தெரிவித்துள்ளார்.