செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 6 ஏப்ரல் 2022 (17:12 IST)

கொரோனா குறைந்தாலும் முக கவசம் அணிய வேண்டும்: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

Radhakrishnan
தமிழகத்தில் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி கடைபிடித்தல் ஆகியவை சுய விருப்பத்தின் பேரில் கடைபிடிக்கலாம் என தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்தது 
 
மேலும் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் வாபஸ் பெறப்படுவதாக தமிழக அரசின் சுகாதாரத் துறை தெரிவித்திருந்தது. இந்த நிலையில் திடீரென சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தமிழ் நாட்டில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த போதிலும் முககவசம் அணியுங்கள் என அறிவுறுத்தியுள்ளார்
 
தற்போது கொரோனா  பாதிப்பு 20ஆக குறைந்த போதிலும் ஆங்காங்கே சில இடங்களில் உயர்ந்து வருகிறது என்றும் எனவே முகக் கவசம் அணிவது பாதுகாப்பானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்