1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (15:02 IST)

லைட்டா கண் அசந்த போலீஸ்.. கை விலங்குடன் கம்பி நீட்டிய திருடன்!

திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட திருடன், போலீஸார் தூங்கிய நேரத்தில் தப்பி சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோபி செட்டிப்பாளையத்தில் திருட்டு வழக்கு ஒன்றில் தனசேகரன் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பின்னர் ஒரு போலீஸ் குழு அவரை நாகப்பட்டிணம் அழைத்து சென்றுள்ளது. அப்போது வளம்பங்குடி அருகே காவல் வாகனம் சென்றபோது போலீஸார் அசதியில் தூங்கியுள்ளனர்.

சரியான தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்த கைதி தனசேகரன் போலீஸார் தூங்கியதை வாய்ப்பாக பயன்படுத்தி தப்பியுள்ளான். தப்பி சென்ற கைதியை போலீஸார் 3 குழு அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர்.