1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 21 மே 2018 (11:52 IST)

ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டு நகை பணம் கொள்ளை

திருவண்ணாமலையில் ஆசிரம நிர்வாகியை கட்டிப்போட்டுவிட்டு 25 சவரன் நகை, 25 ஆயிரம் நகை ஆகியவற்றை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திருவருட்பா என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வந்தது. இந்த ஆசிரமத்தை கலைமணி(77) என்பவர் நிர்வாகித்து வந்தார்.
 
இந்நிலையில் நேற்றிரவு  திருவருட்பா ஆசிரமத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் கலைமணியை கட்டிப்போட்டு விட்டு ஆசிரமத்தில் இருந்த 25 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர்.
 
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து கலைமணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.