1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated: சனி, 12 மே 2018 (10:35 IST)

மூதாட்டி கொலை - கிராமங்கள் வெறிச்சோடின

திருவண்ணாமலையில் கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற 5 பேரை பொதுமக்கள் தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள அத்திமூரில் உள்ள ஒரு கோவிலுக்கு 5 பேர் சாமி கும்பிட வந்துள்ளனர். அவர்கள், அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதால், அங்கிருந்த பொதுமக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் குழந்தைகளை கடத்த வந்துள்ளனர் என நினைத்த அவர்கள் அந்த 5 பேரையும் கொடூரமாக அடித்து உதைத்தனர். அதில், ருக்குமணி என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
இந்நிலையில் போலீஸார் இதுவரை இந்த கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட 25 பேரை  கைது செய்துள்ளனர். அதில் 13 வயது சிறுவன் கடலூர் சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்றவர்களை வேலூர் ஜெயிலிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து 10 கிராமங்களில் பலர் வீட்டை பூட்டி விட்டு தலைமறைவாகி உள்ளனர். போலீஸார் 3 வது நாளாக தலைமறைவாக இருக்கும் ஊர்மக்களை தேடி வருகின்றனர்.