திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 19 மே 2018 (14:36 IST)

சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் கொள்ளை

ஆண்டிப்பட்டி அருகே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி க.விலக்கு பகுதியைச் சேர்ந்தவர் அம்மாவாசி(47). இவர் பெரியகுளம் தென்கரை காவல் நிலையத்தில்  சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் அம்மாவாசி தனது குடும்பத்தாருடன் திருப்பதி கோவிலுக்கு சாமி கும்பிடச் சென்றுள்ளார். இந்த சந்திரப்பத்தை பயன்படுத்திக்கொண்ட திருடர்கள் அம்மாவாசியின் வீட்டினுள் புகுந்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
 
அம்மாவாசியின் வீட்டுக்கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், இதுகுறித்து காவல் துறையினரிடம் புகார் தெரிவித்தனர். அம்மாவாசி இன்னும் வீடு திரும்பாததால், வீட்டில் திருடப்பட்ட பணம் நகை எவ்வளவு என்பது தெரியவில்லை. போலீஸார் இதுகுறித்து வழக்கு பதுவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸ் காரரின் வீட்டிலே திருடர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.