புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (11:02 IST)

ஈ அடித்த திரையரங்குகள்... உரிமையாளர்கள் வேதனை!!

திரையரங்குகள் திறக்கப்பட்டும் ரசிகர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது இதனால் திரையரங்குகள் மூடப்பட்டது. கிட்டதட்ட 8 மாதங்களுக்கு பிறகு நவம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகள் திறக்கப்பட்டதற்கு. க்யூப் நிறுவனம், நவம்பர் மாதம் முழுவதும் விபிஎஃப் கட்டணத்தில் 100 சதவீத தள்ளுபடியை அறிவித்தது. 
 
இதனால் தீபாவளிக்கு 7 புதிய படங்கள் தியேட்டரில் ரிலீஸ் ஆனது.  பிஸ்கோத், இரண்டாம் குத்து, தட்றோம் தூக்குறோம், மரிஜுவானா, பச்சைக்கிளி, கோட்டா, நுங்கம்பாக்கம் ஆகிய படங்கள் திரைக்கு வந்தன. இருப்பினும் திரையரங்குகளில் 80% இருக்கைகள் காலியாக இருந்ததாக தெரிகிறது. 
 
தியேட்டர்களுக்கு ரசிர்கள் வருகை மிகவும் குறைவாக உள்ளதாக தியேட்டர் உரிமையாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பல இடங்களில் கூட்டம் குறைவால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.