திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உத்தரவு: என்னவாகும் மாஸ்டர்?

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 8 ஜனவரி 2021 (15:41 IST)
ஜனவரி 11 ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. 

 
தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அனுமதி வாபஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் திட்டமிட்டபடி 'மாஸ்டர்' திரைப்படம் குறிப்பிட்ட தினத்தில் வெளியாகும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. 
 
இந்நிலையில், ஜனவரி 11 ஆம் தேதி வரை திரையரங்குகள் 50% இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும், தமிழக அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் மறுபரிசீலனை செய்து முடிவெடுக்கும் என நம்புவதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 


இதில் மேலும் படிக்கவும் :