வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (12:26 IST)

அட்மின்களா கேட்டுச்சா? மாஸ்டரை இணையத்தில் வெளியிட தடை! – நீதிமன்றம் உத்தரவு!

நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13ல் வெளியாக உள்ள நிலையில் அதை இணையத்தில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான படம் மாஸ்டர். படம் முழுவதுமாக தயாராகி ஒரு வருடம் ஆகிவிட்ட நிலையில் கொரோனா காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஜனவரி 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை தொடர்ந்து தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களை அரசு அனுமதித்துள்ளது. இந்நிலையில் புதிய படங்கள் திரையிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே வலைதளங்களில் வெளியாகி விடுவது தமிழ் சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் மாஸ்டர் பட வெளியீட்டாளரான செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ மாஸ்டர் திரைப்படத்தை வலைதளங்களில் வெளியிடுவதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் மாஸ்டர் திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.