ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 25 ஆகஸ்ட் 2019 (17:29 IST)

குட்டி இளவரசரை கிண்டல் செய்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ... திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்

பிரிட்டனில் ஜனநாயக முறையில் ஆட்சி நடந்தாலும் கூட அங்குள்ள அரச குடும்பத்துக்காக மரியாதையை அவர்கள் என்றைக்குமே குறைந்ததே இல்லை. அது எல்லா நாடுகளுக்கும் தெரிந்ததுதான்.
இந்நிலையில் பிரிட்டன் இளவரசர் ஜார்ஜ் ,பாலே நடனம் பழகுவதை கிண்டல் செய்த ’குட் மார்னிங்  அமெரிக்கா’ என்ற யூடியூப் சேனலைச் சேர்ந்த ஆங்கருக்கு எதிராக நெட்டிசன்கள் சகட்டு மேனிக்கு விமர்சனம் தெரிவித்து திட்டி வருகின்றனர்.
 
’குட் மார்னிங்  அமெரிக்கா’ என்ற யூடியூப் சேனலின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர்  லார ஸ்பென்சர் அவர் பிரிட்டனின்  இளவரசரான 6 வயதான ஜார்ஜ் குறித்து சில விஷயங்கள் கூறினார்.அதில், பாலே வகை நடனத்தில் மீது குட்டி இளவரசர் ஜார்ஜுக்கு காதல் உள்ளது. இதை அவரது தந்தை இளவரசர் வில்லியன்சன் தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து லாரா ‘ வில்லியம்சன் தெரிவித்ததைக் குறித்து கிண்டல் செய்யும் விதமாகச் சிரித்தார்.  இதைப் பார்த்த நெட்டிசன்ஸ் சமூக வலைதளத்தில் அவரது இந்த செயலுக்கு கடும் விமர்சனங்களை தெரிவித்துவருகின்றனர்.