வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 20 ஆகஸ்ட் 2019 (18:03 IST)

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு பேத்தி ...

அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்புக்கும் அவரது முதல் மனைவி இவானா டிரம்புக்கும் பிறந்த 3 வது குழந்தை எரிக். இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு லாரா என்பவரை திருமணம் செய்தார். இந்த தம்பதியினருக்கு எரிக் கியுக் என்ற ஒரு மகன் உள்ளார்.
இந்நிலையில் அடுத்தாண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் 2 வது முறையாக டிரம்ப் போட்டியிடவுள்ளார். இதற்காக வேலைகளில் 2வது முறையாக கர்பமுற்ற லாரா தீவிரமாக ஈடுபட்டுவந்தார். கடந்த மாதம் டிரம்புக்காக மகளிர் என்ற நிகழ்ச்சியில் கூட  நடனமாடி விருந்தினர்களை வரவேற்றார். இவரது நடனம் பெரும் வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் எரிக் - லாரா தம்பதியினருக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இக்குழந்தைக்கு கரோலினா டோரதி டிரம்ப் எனப் பெயரிட்டுள்ளனர். இக்குழந்தை டிரம்பின் 10வது பேரக்குழந்தை என்பது குறிப்பிடத்தக்க்து.