திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 24 ஜூலை 2023 (13:50 IST)

அக்காவின் மரணத்தில் குத்தாட்டம் போட்ட தங்கை....

CHENNAI
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட பெண் சமோசா வியாபாரியின் இறுதி ஊவலத்தின்போது, அவரது தங்கை நடனமாடும் வீடியோ பரவலாகி வருகிறது.

சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகர் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேஸ்வரி. இவர் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் பழங்களை விற்பனை செய்து வந்தார்.

கடந்த 19 ஆம் தேதி இரவு இவர் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து, ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.

ராஜேஸ்வரியின் சகோதரி  நாகவைக்கு ஏற்கனவே திருமணமான  நிலையில், திண்டிவனத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி, ராஜேஸ்வரி தன் தங்கை  நாகவள்ளியை கண்டித்து, சக்திவேலுடன் பேசக் கூடாது என எச்சரித்துள்ளார்.

இதனால், தன் அக்காவின் மீது ஆத்திரத்தில் இருந்த நாகவள்ளி, தன் உறவினனர், ஜெகதீசன் ஆகியோருடன் திட்டமிட்டு, ராஜேஸ்வரியை படுகொலை செய்ததாக விசாரணையில் தகவல் வெளியானது.

இது யாருக்கும் தெரியக் கூடாது என்பதற்காக தன் உடன் பிறந்த சகோதரி ராஜேஸ்வரியின் இறுதி ஊர்வலத்தில்   நாகவள்ளி  குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.