1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 செப்டம்பர் 2020 (17:49 IST)

தூங்கிக் கொண்டிருந்த முதியவர் மீது காரை ஏற்றிய இளம் பெண் !

சென்னை சாந்தோம் பகுதியில் வயதான ஒரு செக்யூரிட்டி தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியே சொகுசுக் காரில் வந்த இளம்பெண் தனது அப்பார்ட்மெண்ட் வளாகத்தில் காரை நிறுத்த முயன்றபோது முதியவர் மீது காரை ஏற்றியுள்ளார்.


ரத்த வெள்ளத்தில் கிடந்த முதியவர் குறித்து அருகில் உள்ளோர் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதுகுறித்து  வழக்குப் பதிவிட்ட போலீஸார் அந்த 18 வயது இளம் பெண்ணிடம் விசாரித்துள்ளனர். அப்போது, அவர் உறங்கிக் கொண்டிருந்ததை தான் பார்கவில்லை என்றும் அவரது குரல் கேட்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது குறிப்பிடத்தகக்து.