திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (16:43 IST)

மது குடித்துவிட்டு தகராறு... இளைஞர் முகத்தில் வெந்நீரை ஊற்றிய இளம் பெண்...

மதுகுடித்துவிட்டு வந்து போதையில் இன்னொருவர் வீட்டுக் கதவைத் தட்டி மதுகேட்ட இளைஞர் மீது ஒரு இளம்பெண் வெந்நீரை ஊற்றிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் (24 வயது ) தான் வசிக்கும் வீட்டில் அருகே உள்ளவரிடம் தினமும் தகராறு செய்து வந்ததாகவும், மதுகுடித்துவிட்டு வரும் நாளில் கதவைத் தட்டிச் செல்வதை வாடிக்கையாகக் கொண்டதாகவும் தெரிகிறது.

இந்நிலையில் இன்று அதிகாலை வேளையில் இளைஞர்  அப்பெண்ணின் வீட்டுக் கதவைத் தட்டி தொல்லை கொடுத்துள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த அப்பெண், கொதிக்கும் நீரை எடுத்து, இளைஞர் மீது ஊற்றியுள்ளார். இதனால் அலறித் துடித்த இளைஞரை அக்கம் பக்கத்தில் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.