வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 12 ஜனவரி 2024 (09:37 IST)

ஆசைக்கு இணங்காத சிறுவனை கொன்று போலீஸ் ஸ்டேஷன் முன்பு போட்ட இளைஞன்! – தூத்துக்குடியில் அதிர்ச்சி!

தூத்துக்குடியில் ஓரினசேர்க்கைக்கு இணங்காத சிறுவனை குத்தி கொன்று காவல் நிலையம் முன்று இளைஞன் ஒருவன் வீசி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் அருகே உள்ள வேம்பார் கிராமத்தில் செயல்பட்டு வரும் கடலோர பாதுகாப்பு காவல் நிலையம் அருகே நேற்று முன் தினம் அடையாளம் தெரியாத சிறுவன் ஒருவனின் உடல் கிடந்துள்ளது. சிறுவனின் உடலில் கழுத்து, கை, வயிற்று பகுதிகளில் கத்தியால் குத்திய காயங்கள் காணப்பட்டுள்ளது. இறந்து கிடந்த சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீஸார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் விசாரிக்கபட்ட 19 வயது இளைஞர் தாமஸ் என்பவர் தான் சிறுவனை கொன்றதாக ஒப்புக் கொண்டுள்ளார். எதற்காக சிறுவனை கொன்றார் என விசாரித்தபோது அவர் கூறிய வாக்குமூலம் அதிர்ச்சியடைய செய்துள்ளது.


நேற்று முன் தினம் அந்த சிறுவன் உடல்நலக்குறைவால் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளான். அவனது தாய், தந்தையரும் வெளியே சென்றிருக்க, ஆள் யாரும் இல்லை என்பதை அறிந்த தாமஸ் வீட்டிற்குள் புகுந்து அந்த சிறுவனிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் சிறுவன் பயந்து கத்த தொடங்கவே தான் வைத்திருந்த கத்தியால் சிறுவனை குத்திக் கொன்று காவல் நிலையம் முன்பு போட்டு விட்டு சென்றுள்ளார்.

அவரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ள நிலையில் சிறுவனை பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

Edit by Prasanth.K