நீண்டகால சிறைக் கைதிகளுக்கு 3 மாதங்கள் விடுமுறை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு..!
நீண்ட கால சிறைக் கைதிகளுக்கு தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பின்னர் 3 மாதங்கள் விடுமுறை அளித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
நீண்ட காலம் சிறையில் இருக்கும் ஐந்து பேருக்கு தலா 3 மாதம் விடுப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஐந்து பேர்களில் மூன்று பேர் இஸ்லாமியர்கள் மற்றும் இரண்டு பேர் இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர மேலும் 12 பேருக்கு 40 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் காவல்துறை பாதுகாப்பு இல்லாமல் கைதிகள் தங்கள் குடும்பத்தினர்களுடன் இருக்கலாம் என்றும் ஆனால் அதே நேரத்தில் மாதம் ஒருமுறை அவர்களுடைய வீடு அமைந்துள்ள காவல் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
நீண்ட நாள் சிறையில் இருக்கும் சிறை கைதிகள் முன்கூட்டியே தங்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் வாதத்திற்கு பின்னர் மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva