1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , செவ்வாய், 18 ஜூன் 2024 (21:57 IST)

ஆறு மணி நேரத்தில் 195 நாடுகளின் தேசிய கொடிகளை 195 முட்டைகளில் வரைந்து இந்தியா உலக சாதனை

கோவை கீர்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமியில் பயிலும்,பள்ளி மாணவ,மாணவிகள் பத்து பேர் இணைந்து உலக தேசிய கொடிகள் குறித்து அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக புதிய உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
 
அதன் படி பத்து பேரும் இணைந்து 195 நாடுகளின் தேசிய கொடிகளை 195 முட்டைகளின் மேல் பகுதியில் கலர் பென்சில் பயன்படுத்தி வரைந்தனர்.
 
இந் சாதனை நிகழ்ச்சி லிட்டில் லேம்ப் நர்சரி பிரைமரி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
 
கீர்த்தி ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி ,ஹரி காஸ்ட்யூம்ஸ் ஆகியோர் இணைந்து நடத்திய இதில், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா,பிரிட்டன்,ஜெர்மனி,என உலகில் உள்ள 195 நாடுகளின் தேசிய கொடிகளையும் ஆறு மணி நேரத்தில் வரைந்து சாதனை புரிந்தனர்.
 
பத்து பேர் இணைந்து குழுவாக செய்த இந்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது.
 
தொடர்ந்து சாதனை செய்த மாணவ,மாணவிகளுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்கள்  வழங்கும் விழா நடைபெற்றது.
 
இதில் கோவை மாநகராட்சி வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல்,பள்ளி முதல்வர் ஷீலா,தொழிலதிபர் ஆறுமுகம் உட்படபலர் கலந்து கொண்டனர்