திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மே 2024 (10:55 IST)

பிரபுதேவாவின் பாடல்களுக்கு 100 நிமிடம் தொடர்ந்து நடனம்.. கைவிடப்பட்ட உலக சாதனை முயற்சி..!

பிரபல நடிகர் பிரபு தேவா நடனத்தில் கைதேர்ந்தவர் என்பதும் அவர் பல படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து உள்ளார் என்பது தெரிந்தது. இந்த நிலையில் பிரபு தேவா நடன இயக்குனராக பணிபுரிந்த பாடல்களுக்கு நடனமாடும் நிகழ்ச்சிக்கு மாணவ மாணவ மாணவிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தனர்.

100 நிமிடங்கள் தொடர்ந்து பிரபுதேவாவின் பாடல்களுக்கு நடனம் ஆடி உலக சாதனை நிகழ்த்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு பிரபுதேவா வர இருப்பதாக கூறி இருந்த பிரபுதேவா வருகை தராமல் காலம் தாழ்த்தியதாக தெரிகிறது

இதனால் மாணவ மாணவிகளை நீண்ட நேரம் நிற்க வைத்ததால் பெற்றோர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு வெறும் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம் செய்யப்பட்டு நடந்ததாக கூறப்படுகிறது

இந்த நிலையில் இது குறித்து பிரபுதேவா கூறுகையில் ’இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியாதது  வருத்தம் அளிக்கிறது என்றும் மீண்டும் இதே போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் தவறாமல் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்

Edited by Mahendran