1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 3 மே 2024 (14:25 IST)

பிரபுதேவா பாடல்களுக்கு 100 நிமிடங்கள் நடனம் ஆடி உலக சாதனை படைத்த நடன- கலைஞர்கள்!

உலக சாதனை படைக்கும் நிகழ்வாக ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பிரபுதேவா பாடல்களுக்கு 100 நிமிடங்கள் நடனம் ஆடி சாதனை புரியும் நிகழ்வு சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில்  நடைபெற்றது. 
 
இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடன இயக்குனரும் நடிகருமான பிரபுதேவா கலந்து கொள்வதாக இருந்த நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இந்நிகழ்வில் அவர் நேரில் கலந்து கொள்ளவில்லை. 
 
பிரபுதேவா வருவார் என்று காத்திருந்த நடன கலைஞர்கள் ஏமாற்றம் அடைந்துவிட கூடாது என்று  காணொளி வாயிலாக நடன கலைஞர்களை உற்சாகப்படுத்தினார் 
 
மேலும் தான் நேரில் கலந்துகொள்ள இயலாமைக்காக நிகழ்வுக்கு வந்திருந்த நடனக்கலைஞர்கள், பெற்றோர்கள், ஊடகத்தினர் மற்றும் விழா அமைப்பாளர்களிடம் தனது வருத்தத்தையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொண்டார்  பிரபுதேவா.
 
மேலும் மீண்டும் ஒரு பிரமாண்ட நிகழ்வில் நாம் நிச்சயம் சந்திப்போம் என்ற வாக்குறுதியையும் வழங்கினார்..