1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 2 ஏப்ரல் 2025 (15:00 IST)

திருப்பூரில் நடந்தது ஆணவக் கொலை இல்லை! - போலீஸார் கொடுத்த புது விளக்கம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் அண்ணனே தங்கையை அடித்துக் கொலை செய்த விவகாரம் குறித்து போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

 

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கல்லூரி மாணவி வித்யா என்பவர் பீரோ விழுந்து பலியானதாக சொல்லி அவரது குடும்பத்தார் அவரை புதைத்துள்ளனர். ஆனால் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வித்யாவின் காதலர் போலீஸில் புகார் அளித்த நிலையில் இதுகுறித்து வித்யாவின் அண்ணன் சரவணனை போலீஸார் விசாரித்தபோது அவர்தான் வித்யாவை கொன்றார் என தெரிய வந்தது.

 

வித்யா வேறு சமூகத்து இளைஞரை காதலித்ததால் சரவணன், வித்யாவை ஆணவக்கொலை செய்துவிட்டதாக கூறப்படும் நிலையில், இந்த கொலை சம்பவம் குறித்து திருப்பூர் எஸ்.பி கிரிஷ் குமார் யாதவ் அளித்த விளக்கத்தில் இது ஆணவக் கொலை இல்லை என்று தெரிவித்துள்ளார்.

 

வித்யா சரியாக படிக்காமல் இருந்ததால் சரவணன் கண்டித்ததால் இருவரிடையே 2 மாதங்களாக பேச்சுவார்த்தை இல்லாமல் இருந்து வந்ததாகவும், காதலை விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறு சரவணன் அறிவுறுத்திய நிலையில் வித்யா வாக்குவாதம் செய்ததால் சரவணன் ஆத்திரத்தில் இரும்பு கம்பியால் வித்யாவை தாக்கியதில் அவர் உயிரிழந்தார் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K